--- --:--:-- --

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை..!

13

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரை கூட மக்கள் மறந்துவிடலாம் ஆனால் அந்த தொடரின் பாடல் இப்போதும் பலரது ஹிட் லிஸ்டில் இருக்கும். அதில் நாயகியாக நடித்தவர் தான் சந்திரா லக்ஷ்மன்.

 

தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த மனநெல்லாம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தொடர்ந்து மலையாளத்தில் நடித்த அவர் தமிழில் சீரியல் பக்கமும் வந்தார். கோலங்கள், மகள், சொந்தபந்தம், பாசமலர் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

 

இறுதியில் தமிழில் தில்லாலங்கடி படத்தில் நடித்தார், அதன்பிறகு மலையாளத்தில் தான் தொடர்ந்து நடிக்கிறார்.கடந்த ஆண்டு தனது சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 38 வயதில் திருமணம் செய்துகொண்ட சந்திராவிற்கு பலரும் மனதார வாழ்த்து கூறினார்கள்.

 

தற்போது சந்திரா கர்ப்பமாக இருக்கிறாராம். அழகிய போட்டோ ஷுட் நடத்த அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon