--- --:--:-- --

டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபட்டு வந்த நபர் உயிரிழப்பு..!

6

மெரிக்க அதிபரை கடவுளாக நினைத்து அவருக்கு சிலை வடிவமைத்து வழிபட்டு தெலுங்கானாவை சேர்ந்த துசா கிருஷ்ணா மாரடைப்பால் மரணமடைந்தார். டிரம்ப்புக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து சாப்பிடாமல் இருந்த கிருஷ்ணா திடீரென மயங்கி விழுந்து உயிர் இழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

 

கிருஷ்ணா கடந்த ஆண்டு 2 லட்சம் ரூபாய் செலவில் ஆறடி உயரத்தில் டிரம்ப்புக்கு தனது வீட்டிலேயே சிலை அமைத்தார். சீன வைரஸை தான் வென்று விட்டதாகவும் இனி அது தன்னை தாக்காது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார் .

 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் கொரொனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதை உணர்வதாகவும் இது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்கும் முன் அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக டிரம்ப்பிடமிருந்து பிறருக்கு தொற்று பரவும் அபாயம் நீங்கி விட்டதாக வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Right Menu Icon