சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்சில் வெளியானது பொன்மகள் வந்தாள் திரைப்படம்!
அமேசான் பிரைமில் ரிலீஸான இன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் சட்டவிரோதமாக பொன்மகள்வந்தாள் திரைப்படம் வெளியாக இருப்பது சினிமா உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எழுந்த பிரச்சினைக்கு மத்தியில் அந்த படம் இன்று அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட்டது.
அவ்வாறு ரிலீசான சில நிமிடங்களில் அதே ஹெச்டி தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் சட்டவிரோதமாக வெளியானது. திரையரங்குகளில் படங்கள் ரிலீஸாகும் அதே நாளில் தமிழ்ராக்கஸ் தளத்தில் திரைப்படங்கள் வெளியாகும். இந்நிலையில் ஓடிடி தளத்தில் வெளியான படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுதனமாக வெளியிட்டு உள்ளது.






