சென்னையில் பேன்சி ஸ்டோரில் திருடும் போலீஸ்காரர்
சென்னையில் பேன்சி ஸ்டோரில் போலீஸ்காரர் ஒருவர் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆஷிக் என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் வெளியே அடுக்கி வைத்திருந்த பள்ளி மாணவர்களுக்கான பை ஒன்றை எடுத்து சென்றார்.
இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தனஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் ஆஷிக் இந்த காட்சியை தனது நண்பர்கள் வாட்ஸப் குழுவில் அனுப்பினார். இந்த வீடியோவை பார்த்த ஒருவர் ஆஷிக் கடைக்கு வந்து வீடியோவில் இருப்பது தனது நண்பர் வினோத் என்றும், அவர் காவலராக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கூடி போதையில் திருடியதாகவும் ஒப்புக்கொண்டார் காவலர் வினோத். தான் திருடி சென்ற பைக்கான பணத்தை கொடுத்து விட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




