--- --:--:-- --

அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேரை கைது செய்தது காவல்துறை!

4.2

வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையான்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட பொட்டல் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் (29), பால்ராஜ்(35), வள்ளிநாயகம் (32), சங்கரநாராயணன் (27), அத்தியப்பன் (26), வரதன் (50), சமுத்திரபாண்டி (38) ஆகிய ஏழு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வீரவநல்லூர் ஆய்வாளர் சாம்சன் u/s 379 IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து, மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon