--- --:--:-- --

இந்த மாதம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கிறதா மின்சார வாரியம்? காரணம் தெரியுமா?

5

கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் இந்த மாதம் மின்சார கட்டணம் கூடுதலாக இருந்ததாக மின் நுகர்வோர் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கான விளக்கத்தை மின்வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஒரு மின்நுகர்வோர் கடந்த ஜனவரி மாதம் 600 யூனிட் பயன்படுத்துவதற்காக 2 ஆயிரத்து 440 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

 

மார்ச் மாதம் கணக்கீட்டாளர் வராத நிலையில் பழைய ஜனவரி மாதக் கட்டணத்தை அவர் செலுத்தியுள்ளார். தற்போது மீண்டும் மின் கணக்கீடு நடக்கும் நிலையில் அதை நுகர்வோருக்கு 925 யூனிட்டுக்கு 6,739 ரூபாய் கட்டணமாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதே குற்றச்சாட்டை திருநெல்வேலியை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கான காரணம் குறித்து மின்சார வாரியத்திடம் கேட்டபோது 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும்போது 100 யூனிட் இலவச மின்சாரம் போக ஒரு யூனிட்டுக்கு அதிகபட்ச விலையாக ஆறு ரூபாய் 60 பைசா என்ற அளவில் மீதமுள்ள யூனிட்டிற்கு கணக்கீடு செய்ய படுவதையே இந்த அதிகரிப்பிற்கு காரணமென தெரிவிக்கின்றனர்.

 

அத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் இருப்போர் அதிகரித்துள்ளதாகவும் வீட்டிலுள்ள ஏசி, மின்விசிறி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது கூடுதலாக கட்ட வேண்டி இருப்பதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மின் நுகர்வு அதிகம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon