--- --:--:-- --

தெலங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 12 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு!

4

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தான். தெலுங்கானா மாநிலம்மேடக் மாவட்டத்தில் உள்ள கொடிசின் பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிக்சர் பள்ளியின் வீட்டில் அவரின் மைத்துனரின் மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டிருந்தான்.

 

அப்போது மூடப்படாமல் இருந்த ஆள்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டனர். பின்னர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால் இதற்கிடையே அச்சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

Leave a Reply

Right Menu Icon