--- --:--:-- --

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வட மாநிலத்தவர் இருவர் கைது!50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!கருமத்தம்பட்டி போலீசார் அதிரடி நடவடிக்கை !!!

3

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள சோமனூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.

 

இந்நிலையில் இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களின் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜ் காவலர்கள் மகேந்திரன் , பிரகாஷ்ராஜ் , யுவராஜ் ஆகியோர் கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது,அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா,குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குப்பாராவ் (32) மற்றும் சிஹால் லால்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

மேலும்,மளிகை கடையில் வைத்து இருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக வட மாநிலத்தவர் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon