--- --:--:-- --

சாத்தான் குள சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முத்து ராஜை கைது செய்த போலீஸ்!

1

சாத்தான்குளத்தில் இரட்டை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை போலீசார் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். சாத்தான்குளத்தில் சிறுவன் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் பல குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்தது. இந்தநிலையில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள காவலர் முத்துராஜை ஓட்டப்பிடாரம் அருகே பூசனூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon