--- --:--:-- --

100 நாள் பணியின்போது விஷ வண்டு கடித்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு..!

11

ரூர் அருகே 100 நாள் பணியின்போது விஷ வண்டு கடித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அங்கு உள்ள அமராவதி ஆற்றில் கதவணை அருகே அமைந்துள்ள பூங்காவில் 70க்கும் மேற்பட்டவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது குப்பைகளை சேகரித்து தீ மூட்டிய போது கூட்டிலிருந்து கலைந்த கதண்டுகள் எனப்படும் விஷ வண்டுகள் அனைவரையும் விரட்டி விரட்டி கடித்துள்ளது.

 

ஆளுக்கொரு திசையில் ஓடிய நிலையில் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி கார்த்தி என்பவர் விஷ வண்டுகள் தாக்கியதில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon