நடிகை கனிகாவை மணம் முடித்த சினேகன்..!
திரைப்படப் பாடலாசிரியரும் மக்கள் நீதி மையத்தின் மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகன் நடிகை கனிகாவை மணம் முடித்துள்ளார். சினேகன் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். அதன்பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பிரபல நடிகை கன்னிகா ரவியுடன் திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா அமீர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியரும் நடிகை கனிகா ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண வாழ்க்கையின் இணைந்துள்ளனர்.






