சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து!
பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட விடுதலை சிறுத்தையின் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை ஒத்தக்கடை புதுக்கோட்டையை சேர்ந்த விடுதலை சிறுத்தை பிரமுகரான சரவணன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் மதுரை ஒத்தக்கடை காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.







