--- --:--:-- --

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

10

கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே நான்கு முறை மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார். ஊரடங்கு முடிய ஒரு வாரமே உள்ள நிலையில் ஐந்தாம் முறையாக மாநில முதலமைச்சர்கள் காணொளியில் இன்று கலந்துரையாடவுள்ளார்.

 

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த கலந்துரையாடலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அப்போது கொரொனா அதிகமாக பரவியுள்ள இடங்கள் ,வருவதற்கான காரணங்கள், அதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய போதிய அளவில் சோதனை கருவிகள் மருந்துகள் உள்ளனவா என்பது குறித்தும் பிரதமர் கேட்டறிவார் என கூறப்படுகிறது.

 

ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது பற்றியும், ஊரடங்கை தளர்த்தினால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பொருளாதாரம் பாதிப்பை சரிசெய்ய தமிழகத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கவும் வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்கை வழங்கவும் முதலமைச்சர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon