மறைந்த பாஜக மூத்த தலைவர் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் வெளியிடுகிறார்..!
மறைந்த பாஜக மூத்த தலைவர் விஜய ராஜேஸ் கிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக வெளியிடுகிறார். பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜய ராஜேஷ் கிந்தியா மக்களவை உறுப்பினராக 7 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் கிந்தியா மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜின் ஆகியோரின் தாயார் ஆவார்.







