பசுமாட்டிடம் பால் குடித்த ஆடு..! பாசத்தோடு அரவணைத்த பசு..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாட்டிடம் பால் குடித்தது கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மோரணம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பெருமாள் தன் வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார்.
அவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டிடம் பால் குடித்துக் கொண்டிருக்க அதை தாக்காமல் பாசத்தோடு அரவணைத்த பசுமாட்டை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்.







