கலைஞர் மகளிர் திட்ட துவக்க விழாவில் தூங்கி விழுந்த பொதுமக்கள்..!
விழுப்புரத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இரண்டாம் கட்ட துவக்க விழாவில் மக்கள் தூங்கி வழிந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்ட கல்லூரி கலைஞரின் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இரண்டாம் கட்ட துவக்க விழா நடைபெற்றது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்பொழுது நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தூங்கி வழிந்த படியும் செல்போன்களில் பயன்படுத்திய படியும் அமர்ந்திருந்தனர். இதே போல் அரசு அதிகாரிகளும் செல்போனில் மூழ்கியதாக கூறப்படுகிறது.





