பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்..!
நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார். டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா உள்ளிட்ட பல படங்களை நடித்த பிரபலமானவர். கங்கா தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





