சாக்கடை நீரில் குளிக்கும் நபரால் அச்சம் தெரிவிக்கும் மக்கள்!
கொரொனா உலகம் முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் கொரொனா பரவும் தன்மை உடையதாக உள்ளது என்பதில் ஐயமில்லை. கொரொனா வைரஸ் காற்றின் மூலமும் கூட பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதற்கு கூட அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. இந்த சூழலில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது. இந்த ஊரடங்கு உத்தரவு கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. கொரொனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் கழிவு நீரில் குளிக்கும் ஒருவரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து கழிவு நீரில் குளிக்கும் நபரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் தினமும் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரில் ஆசுவாசமாக சோப்பு போட்டு குளித்துஉடை மாற்றிக் கொண்டு செல்கிறார்.
இதனால் தொற்று ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







