தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது இறந்தது போல் நடித்து உயிர் தப்பிய மக்கள்..!
யாத்திரிகர்கள் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது. 33 பேர் காயமடைந்தனர்.
பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த பிறகும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து சில நிமிடங்கள் சுட்டதாக தாக்குதலில் உயிர் பிழைத்த நபர் ஒருவர் கூறினார்.
தாங்கள் அசையாமல் சடலம் போல இருந்ததால்தான் தீவிரவாதிகள் விட்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.





