ஏடிஎம்மில் நூதன முறையில் திருடிய வட மாநில இளைஞர்..!
சென்னை ஆவடி பகுதியில் உள்ள ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் பணத்தை திருடிய வட மாநில சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்பிஐ, ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு சென்ற வட மாநில சிறுவன் ஒருவன் ஏடிஎம் மிஷினில் பணம் வெளியே வரும் பகுதியில் அட்டை வைத்து அடைத்துள்ளான். இதனால் பொதுமக்கள் எடுக்க வேண்டிய பணம் ஏடிஎம் மிஷனில் உள்ளே விழுந்துள்ளது.
பொதுமக்கள் வந்து சென்ற பின் கள்ள சாவியால் ஏடிஎம் மிஷினை திறந்து எடுத்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.





