--- --:--:-- --

புதுச்சேரியில் கரை ஒதுங்கிய மீனை ஆச்சர்யத்துடன் காணும் மக்கள்..!

8

புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சிறிய வகை திமிங்கலத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். வம்பா கீரப்பாளையம் கடற்பகுதியில் மொராக்ஷ்ஸி என்ற சிறிய வகை திமிங்கல வகை மீன் கரை ஒதுங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

இந்த வகை திமிங்கல மீன்கள் வலையில் சிக்காது என்றும் தவறுதலாக ஏதாவது சாப்பிட்டதன் காரணமாக கரை ஒதுங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் பரவியதையடுத்து திரளான மக்கள் திமிங்கலத்தை பார்த்தபடி சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon