--- --:--:-- --

வரும் 31ம் தேதி வரை புதிய திருமண ஏற்பாடுகள் , கூட்டு பிரார்த்தனைகளுக்கு தடை — பெந்தகோஸ்தே திருச்சபை அறிவிப்பு !!!

9

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்ற உப தலைவர் டேவிட் பிரகாசம் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எங்கள் திருச்சபைக்கு உட்பட்ட அனைத்து ஆலயங்களிலும் கிருமி நாசினி கொண்டு தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். வார நாட்களில் கூட்டு பிரார்த்தனை நடத்த தடை விதித்துள்ளோம். ஆனால், தனி நபர் ஜெபம் மட்டும் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை அதிக அளவில் சேர்க்காமல் பிரார்த்தனை நடத்த எங்கள் திருச்சபைக்கு உட்பட்ட 37 ஆயிரம் ஆலயங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும்,வரும் 31ம் தேதி வரை புதிதாக திருமணத்தை பதிவு செய்வதை தடை விதித்துள்ளதாக தெரிவித்த அவர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமணங்களிலும் அதிக அளவில் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கூட்டு பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் 2 முதல் 3 மணி நேரம் நடக்கும் பிரார்த்தனை நேரம் தற்போது ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon