கொரொனாவுக்கு பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம்..!
கொரொனாவுக்கு பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தாராளமான ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் நபர் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு இ எஸ் ஐ சி எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் ஓய்வூதியம் மரணித்த நபர் பெற்ற ஊதியத்தின் 90 சதவீதம் என்ற அளவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் முதலீட்டுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களும் அதிகரிக்கப்பட்டு இந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும். காப்பீட்டு பலன்கள் 6 லட்சத்திலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச காப்பீட்டு பலன் இரண்டரை இலட்சம் ரூபாயாக நிச்சயிக்கப்பட்டுள்ளது.
2020 பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு இது நடைமுறையிலிருக்கும். இறப்பதற்கு முந்தைய 12 மாதங்களில் வேறு நிறுவனங்களுக்கு மாறிய பணியாளர்களின் குடும்பத்தினரும் இந்த பலனை பெறலாம்.
2020 மார்ச் 24ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி வரையிலான கொரொனா உயிரிழப்புகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்.






