--- --:--:-- --

மயில் பறக்கும் வைரல் வீடியோ!

18

இந்தியாவின் தேசியப்பறவை மயில் .ஆம் அத்தனை அழகுக்கும் சொந்தமான பறவை மயில் என்றால் அது மிகையாகாது. தேசிய பறவை என்றாலும் அனைத்து இடங்களிலும் நம்மால் மயிலை பார்க்க முடியாது. பொதுவாக காடுகள் செழிப்பான வயல்களில் மலைகளில் அல்லது மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மயிலை நாம் கண்டுகொள்ளலாம்.

 

மயிலை பார்ப்பதென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயமே. பொதுவாக கிராம வாசிகள் எல்லோரும் மயில்களை எதிராக பார்த்து விடுவார்கள். ஆனால் நகரவாசிகளுக்கு தான் எப்பொழுதும் அது கஷ்டம். அவர்கள் மயில்களை உயிரியல் பூங்காவில் மட்டுமே ரசிக்க முடியும். அதுவும் சென்னை போன்ற நகரங்களில் மயில்களை காண்பது இயலாத காரியம்.

 

இதில் கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் ஓரளவுக்கு மயில்களைக் காணலாம். மயிலில் நாம் எல்லோருக்கும் பிடித்த விஷயம் அதன் தோகை தான். இதில் ஆண் மயில்களுக்கு மட்டும் நீண்ட தோகை உண்டு. மழை வரும் அறிகுறி வந்தால் மயில் தோகையை விரித்து நடந்து செல்லும் அல்லது அழகான அசைவுகளை கொடுக்கும்.

மயில் சற்று கனமான பறவை என்பதால் அது நெடுந்தூரம் பறக்காது என பலரும் நினைப்பார்கள். ஆனால் மயில் நெடுந்தூரம் பறக்கவும் செய்யும் உயரமாகவும் செல்லும். அத்தகைய மயிலொன்று பறக்கும் காட்சியை ஸ்லோ மோஷனில் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர்.

 

இந்திய வனத்துறை அதிகாரி யான சுத்தானந்தா ஊரடங்கு காலம் அமல்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து பல உயிரினங்களின் அழகான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் குழு தேசிய பூங்காவில் வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஹரிகிருஷ்ணமூர்த்தி எடுத்துள்ள மயில் பறக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon