இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தாததால் நோயாளிகள் அச்சம்..!
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே வைப்பதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரொனா வார்டில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உடல்களை அப்புறப்படுத்துவதற்கு ஊழியர்கள் இல்லாததால் இறந்தவர்களின் உடல் நோயாளிகள் பக்கத்திலேயே வைக்கப்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.






