--- --:--:-- --

பண ஆசையை காட்டி பெண்களை ஏமாற்றிய நபர்..!

5

ரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பண ஆசையை காட்டி பெண்களை ஏமாற்றி விட்டு அவர்களிடமே பணம் பறித்து வந்த நபர் தான் ஏமாற்ற முற்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

 

சித்தோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் அந்த பகுதிக்கு வந்த ஆசாமி ஒருவர் தன்னை நிதி நிறுவன அதிபர் என அறிமுகப்படுத்திக் கொண்டு தொழில் ரீதியான எண்ணை வாங்கி பேசியதாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கில் உள்ள கருப்பு பணத்தை பெண்களுக்கு மட்டும் குறைந்த வட்டிக்கு தருவதாகவும் அதுவும் இரவு நேரத்தில் வந்ததால் ஒப்படைப்பதாகவும் தொடர்ந்து பேசியுள்ளார்.

 

இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அளித்த தகவலின்பேரில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் செல்வம் என்பது திருமணமாகி பெண் குழந்தைகள் இருப்பதும் பெண்களை குறி வைத்து பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு பணம் பறிக்கும் நபர் என்பது தெரியவந்தது.

Leave a Reply

Right Menu Icon