NIRD பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்கள்..!
தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனமான NIRD (National Institute of Rural Development) இந்திய அளவில் முதன்முறையாக தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 15 தலைவர்களை தேர்ந்தெடுத்து ஸ்மார்ட் பஞ்சாயத்து இன்சியேடிவ் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
தேசிய ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் சத்தியபாமா மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர்களும் இணைந்து 5 நாள் பயிற்சியாக ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரன் நகரில் உள்ள என்ஐஆர்டி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் தமிழ்நாட்டின் சார்பாக, திருச்சி மாவட்டத்திலிருந்து துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லிப்பாளையம் ஊராட்சி தலைவர் அரவிந்தன் மற்றும் சேனப்பநல்லூர் ஊராட்சி தலைவர் ராமதாஸ் பயிற்சியில் கலந்து கொண்டனர்.





