தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு!
தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு உலகின் ஒன்பது முன்னணி வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவால் பிறநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக சிறப்பு குழுவை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனையடுத்து அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் போயிங், ரோஸ் ராய்ஸ், யுனைடட் டெக்னாலஜி, ஜெனரல் எலக்ட்ரிக் உள்ளிட்ட 9 முன்னாடி வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களேயும் சிறப்பான தொழில் சூழலையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.






