செல்போனில் ஆபாச வீடியோ பார்த்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 14 வயது சிறுவன் கைது!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக கடந்த 20ஆம் தேதி ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விசாரணை நடத்திய பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதை கண்டுபிடித்து கைது செய்தனர். வேலைக்கு செல்லும் போது அந்த சிறுவன் நண்பர்களுடன் செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுவனை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர்.






