--- --:--:-- --

கையில் எடுக்கபட்ட ‘பி’ மாதிரி..பேரதிர்ச்சியில் கோமதி!

GOMATHIMARIMUTHUASAINGOLDMEDALIST11

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள தொடரின் மகளிர் 800மீஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று தமிழகதத்திற்கு பெருமை சேர்த்தார். தடகள உலகின் சம்பிரதாய சோதனையான ஊக்கமருந்து பரிசோதனை கோமதிக்கு நடத்தப்பட்டது.

 

முதல் கட்டமான ‘ஏ’ மாதிரி சோதனையில் கோமதி நான்ட்ரோலன் என்கிற ஸ்‌டீராய்டு மருந்தை உட்கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அதனால் அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனை முடிவை கேட்டு அதிர்ச்சியடைந்த கோமதி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

 

இந்நிலையில்,இந்த பிரச்சனையை எதிர்கொள்ள கத்தார் சென்றுள்ள கோமதி தன்னிலை விளக்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,ஏதேதோ பெயர்களில் ஊக்க மருந்து இருப்பதாக குறிப்பிடுவதாகவும்.ஆனால் தனக்கு ஊக்கமருந்து என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது எனவும்,அந்த பெயர்களை எல்லாம் தான் கேள்விபட்டதே இல்லை எனவும் கோமதி கூறியுள்ளார்.

தற்போது டோப் டெஸ்டின் அடுத்தபடியான “பி” மாதிரி சோதனைக்காக கத்தார் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். “பி” மாதிரி சோதனையில் வெற்றி பெற்று,தன்மேல் குற்றமில்லை என்பதை நிருபிக்கும்வரை ஓயப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

”ஏ” மற்றும் “பி” மாதிரி சோதனைகள் இரண்டுமே ஒரே அடிப்படை சோதனைதான்.இரண்டு முடிவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.மாற்றம் ஏதும் ஏற்படாது.”ஏ” மாதிரி சோதனையில் குளறுபடி ஏதேனும் இருந்தால் “பி” மாதிரி சோதனை சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon