--- --:--:-- --

ஆன்லைனில் வாங்கிய மடிக்கணினி வேலை செய்யாததால் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!

11

ன்லைன் மூலம் வாங்கிய மடிக்கணினி செயல்படாததால் அதனை மாற்றித் தரவும், நஷ்ட ஈடு வழங்கவும் ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நவநீதகிருஷ்ணன் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் 32,99 ரூபாய்க்கு மடிக்கணினி வாங்கியுள்ளார்.

 

வாங்கிய அன்றே கணினி செயல்படாததால் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் மடிக்கணினி வாங்கியவருக்கு மன உளைச்சல், பெரு நஷ்டம் ஏற்படுத்தியதற்காக 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுத் தொகையாக பத்தாயிரம் ரூபாயும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon