தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்ச் அலர்ட்..! நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் அதீத கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட்டும், தமிழகத்தில் மிக கனமான பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் கடந்த 4ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடகிழக்கு அரபிக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உள்ளது. இது தவிர நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் அதீத கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, கேரளாவில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழை பெய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.







