--- --:--:-- --

தேனி மாவட்டத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு..!

10

தேனி மாவட்டம் சின்னமனூரில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கை பயணம் செய்த வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததில் அண்ணன் கைது செய்யப்பட்டார்.

 

சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்த மல்லிகா என்ற இளம்பெண் தாய்மாமன் மகனான தினேஷ்குமார் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று காதல் திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு கார் மூலம் சிலர் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

 

தகவலறிந்த மல்லிகாவின் அண்ணன் ஆத்திரத்துடன் விரைந்து வந்து காவல் நிலையம் முன்பு நின்றிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon