பெண் குரலில் பேசி மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பறிப்பு..!
எல்ஐசி ஊழியரை போல பெண் குரலில் பேசி மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் அபகரித்த நபர்களை தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த மூதாட்டியிடம் கடந்த ஆண்டு தொலைபேசியில் பேசிய ஒரு பெண் மூதாட்டியின் கணவர் எல்ஐசி பாலிசி தொகை வழங்குவதாக கூறி வங்கி கணக்கு எண்களை பெற்றுள்ளார். பின்னர் தொலைபேசிக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டுக்கொண்டுள்ளாராம்.
இதன் பின்னர் வங்கி கணக்கில் இருந்து ஐந்து தவணைகளாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய புகாரில் 3 தனிப்படை அமைத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





