--- --:--:-- --

கே.சி புரோமோட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் கே.சி.பழனிச்சாமி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 டன் கோதுமை மாவு கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் வழங்கப்பட்டது !!!

1

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இன்றைய நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,387 ஆகவும்,உயிரிழப்பும் ஒரே நாளில் 23 அதிகரித்து 437 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவையில் இது வரை 127 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் , நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உணவின்றி தவித்து வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதியினை வழங்க வேண்டுகோள் விடப்பட்டது.

 

தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,தன்னார்வலர்களும் தாமாக முன் வந்து தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியினை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக அரசுக்கு இதுவரை 134 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வந்துள்ளது.

 

தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,தன்னார்வலர்களும் தாமாக முன் வந்து சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவறளோர்,வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

 

அதன் ஒருபகுதியாக கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் கே.சி.புரோமோட்டர்ஸ் சார்பில் அதன் உரிமையாளர் கே.சி.பழனிச்சாமி கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 டன் கோதுமை மாவினை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர்,சாலையோரங்களில் வசிப்போர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு கே.சி.புரோமோட்டர்ஸ் சார்பில் அதன் உரிமையாளர் கே.சி.பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து வழங்கினார்.

 

அப்போது,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உடன் இருந்தார்.

Leave a Reply

Right Menu Icon