உலகில் அதிக வயதான பூனை உயிரிழப்பு…! சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ரூபில் பூனை..!
இங்கிலாந்து நாட்டில் மைக்கில் ஹெரிடேஜ் என்பவருக்கு வயது 52. இவருக்கு தனது இருபதாவது வயதில் பிறந்தநாளின் போது அவரது நண்பர் பூனை குட்டி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். ரூபில் என அந்த பூனைக்குட்டிக்கு பெயர் வைத்து அதனை அவர் வளர்த்து வந்துள்ளார்.
அந்த செல்லப்பிராணியான ரூபில்க்கு கடந்த ஆண்டு மே மாதம் 31 வயது பிறந்துள்ளது. பூனையின் வயது 31 என்பது மனிதனின் நூற்றி ஐம்பது வயதுக்கு சமம். சராசரியாக ஒரு பூனையின் வாழ்காலம் என்பது பதினைந்து முதல் பதினெட்டு ஆண்டுகளாகவே உள்ளது.
ஆனால் ரூபில் 31 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தது. ரூபில் உயிரிழந்ததால் அதன் உரிமையாளரான ஹெரிடேஜ் மிகவும் கவலை அடைந்துள்ளார். எனவே இந்த ரூபில் தான் உலகிலேயே அதிக நாட்கள் வாழ்ந்த பூனை என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







