--- --:--:-- --

சாத்தான்குள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு..!

9

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முத்துராஜா சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த முத்துராஜை விளாத்திகுளம் அருகே காட்டுப் பகுதியை சுற்றிவளைத்து கைது செய்தனர் தூத்துக்குடி போலீசார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனைக்கு பின் காவலர் முத்துராஜ் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட பின் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தனர்.

 

இந்த வழக்கை சந்தேக மரணம் என்று காவல்துறையினர் பதிவு செய்தாலும் சிபிசிஐடி வசம் அந்த வழக்கு ஒப்படைக்கப்பட்ட பின்பு அந்த இரட்டை கொலை வழக்காக மாற்றப்பட்டு உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆய்வாளர் ஸ்ரீதர், ஏட்டு முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இவர்களை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதில் மற்றொரு குற்றவாளியான முத்துராஜ் தலைமறைவாக இருந்தார். இரண்டு நாட்களாக இவன் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு காவல்துறையினர் அவனை கைது செய்தனர். சிபிசிஐடி குழு நள்ளிரவு முதல் காலை வரை பல்வேறு விசாரணைகளை நடத்தி வந்தனர்.

 

அதனையடுத்து உடல் பரிசோதனையும் முடிக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வந்த பிறகு அவனின் உடல் நலம் பாதுகாப்பாக உள்ளது என தெரிந்த பிறகு தூத்துக்குடி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அதன் பின்பு நடுவர் நீதிமன்றத்தில் ஹேமா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் அவரை வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இவரை சிறையில் அடைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon