--- --:--:-- --

பழைய ஓய்வூதியத் திட்டம் – 6ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

1

மிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் புத்தாண்டில் ஜனவரி 20ஆம் தேதி சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில், வரும் 6ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

 

இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.

 

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்டுள்ள குழு இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

Right Menu Icon