வைர பற்கள் வேண்டுமா..?அசத்தும் சூரத் வியாபாரிகள்..!
இந்தியாவில் செய்யப்பட்ட நகைகள் என்றாலே வெளிநாடுகளில் மிகப்பெறும் சந்தை உண்டு. அந்த வகையில், தற்போது சூரத் நகரில் வைரத்திலான பற்களை செய்து வெளிநாடுகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இதை மக்கள் தங்கள் வாய்க்குள் நகைகளாகவும் அணிகிறார்கள். இந்த வைரத்தை வைத்து 16 பற்களை செய்யும் வியாபாரிகள், அதில் சுமார் 2000 வைர கற்களை பதிக்கிறார்கள். வைரங்கள் மட்டுமில்லாது, தங்கம் மற்றும் வெள்ளியையும் இவர்கள் இந்த பற்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
வைரங்கள் மற்றும் வெள்ளியை வைத்து 16 பற்கள் உள்ள நகைகளை செய்தால் அவை இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதில் தங்கம் சேர்த்தால் அவை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையாகிறது. மேலும் சுமார் 40 கிராம் இடையுள்ள இந்த பற்கள் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்டால், அவை சுமார் 25 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் கூறுகிறார்கள்.





