--- --:--:-- --

சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்..!

6

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, நேற்று இரவு சுமார் 10 மணியளவில் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் காவலரை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சம்பவத்தின் உண்மை நிலை, பின்னணி மற்றும் பெண் காவலர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon