ஆபாச Deep Fake வீடியோ மிரட்டல்.. பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி அதிர்ச்சி புகார்..!
சமீப காலமாக பல்வேறு நடிகைகள் Deepfake வீடியோக்கள் மூலமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ராஷ்மிகா, ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகளின் மோசமான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகைகளின் முகத்தை வேறொரு பெண்ணின் உடல் உடன் இருப்பது போல வீடியோ எடிட் செய்து இணையத்தில் உலவ விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசும் எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி தன்னை ஒரு நபர் deepfake வீடியோ வெளியிடுவேன் என மிரட்டுவதாக தெரிவித்து இருக்கிறார். அந்த ட்விட்டை குறிப்பிட்டு தமிழ்நாடு போலீசில் சனம் ஷெட்டி புகார் கொடுத்திருக்கிறார்.





