--- --:--:-- --

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள தமன்னா, விராட் கோலி, சுதீப் ஆகியோருக்கு நோட்டீஸ்..!

14

ன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் விராட் கோலி, கங்குலி, தமன்னா, பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜூலை மாதமே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் பறி போகும் நிலையில் விரைவாக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று கூறிய நீதிபதிகள் விளம்பரத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் பொது நலனை கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

 

இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் ஆன்லைன் விளம்பரங்களில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி,கங்குலி நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon