--- --:--:-- --

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் நலமுடன் இருக்கிறார்!

12

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார் என தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இந்த மாத தொடக்கத்தில் இருந்தே அறுவை சிகிச்சை செய்யப் பட்டதாகவும் அதன்பின் அவரது உடல்நிலை மோசமடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

மேலும் அவரது உடல்நிலை குறித்து அறிய வடகொரியாவுக்கு சீனா மருத்துவ நிபுணர்களை அனுப்பியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார் என தென் கொரிய அதிபர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார். கடந்த 13 ஆம் தேதியிலிருந்து வடகொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள வால்ஷ் நகரில் தங்கி இருப்பதாகவும் அப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைகள் எதுவும் தென் படவில்லை என்றும் உன் சுங்கின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon