கடும் பனிப்பொழிவால் இமாச்சலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் நிலையில் சாலைகள், வீடுகள், மரங்கள் தெரியாத வண்ணம், வெண்போர்வை பொருத்தியது போல பணி படர்ந்து இருக்கிறது.
66 சென்டிமீட்டர் முதல் 68 சென்டிமீட்டர் அளவுக்கும் பெய்த பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சாலைகளே தெரியாத அளவிற்கு பனி அடர்ந்து இருப்பதால் வாகனங்களை இயக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.





