--- --:--:-- --

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு..!

4

மெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் குளுக் என்ற பெண் கவிஞருக்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

லூயிஸ் குளுக் சுமார் 52 ஆண்டுகளாக கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். இவரது கவிதைகள் இயற்கை மற்றும் மனித உளவியலை சார்ந்து இருக்கும். நோபல் விருதுடன் சுமார் 8 கோடி ரூபாய் பரிசுப் பணமும் லூயிஸ் குளுகுக்கு வழங்கப்பட உள்ளது.

 

இந்தாண்டு கொரொனா பீதி காரணமாக நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon