--- --:--:-- --

திமுக கிராமசபை பரப்புரை கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..!

5

திமுக அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் திமுக கிராமசபை பரப்புரை கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் அதிமுகவில் நிராகரிக்கிறோம் என்று கிராமசபை கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் கூடுவதை பார்த்து முதலமைச்சர் பழனிசாமி அதிர்ச்சியில் மூழ்கி இருப்பதாக கூறியிருக்கிறார்.

 

முதல்வர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கிராமசபை கூட்டங்கள் நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு செய்திக் குறிப்பை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் கிராமசபை வேறு, திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிராம சபை கூட்டம் வேறு என்பதை கூட இந்த உத்தரவின் பின்னணியில் ஒளிந்திருக்கும் முதலமைச்சர் உணரவில்லை என்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

 

இருப்பினும் திமுகவின் கிராமசபை கூட்டங்கள் இனி மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon