நைஜீரியாவில் மேலும் வீரியமிக்க புதிய வகை கொரொனா வைரஸ் பரவலால் அதிர்ச்சி..!
நைஜீரியாவில் மேலும் வீரியமிக்க புதிய வகை கொரொனா வைரஸ் பரவுவதாக தென்ஆப்பிரிக்க சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரொனா வைரஸ் போன்றே தென்னாப்பிரிக்காவிலும் உருமாற்றம் அடைந்த பெருந்தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவற்றை விட வீரியமிக்க உருமாற்றம் பெற்று கொரொனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் என்பதாலும் நைஜீரியா அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதாலும் அதிர்வலைகள் உருவாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொரொனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது வைரஸ் மரபியல் மாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.







