10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாடங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை!
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பாடங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்கு புதிய பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு தொகுதிகளாக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரே ஒரு தொகுதியாக மட்டுமே புத்தகம் வழங்கப்படுவதாகவும் இதனால் பாடங்கள் குறைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகம் கடந்த ஆண்டு போல் இல்லாமல் ஒரே தொகுதியாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் மொத்தம் உள்ள 27 படங்களில் எதுவும் குறைக்கப்படவில்லை என்றும் ஒவ்வொரு பாடத்தின் முடிவில் இடம்பெற்ற தேவையற்ற கூடுதல் பயிற்சி வினாக்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





