தற்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை..!
பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் நீடிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.
ஊரடங்கால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத 35 ஆயிரம் மாணவர்களில் 718 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று செங்கோட்டையன் கூறினார். அவர்களுக்கு தேர்வு நடத்திய பின்னரே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார் அவர். பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்களை ஆசிரியர்களே எடுத்து செய்வதாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார். தனியார் பள்ளிகளில் கட்டண வசூல், இணையதளம் மூலம் பாடம் நடத்துவது உள்ளிட்ட புகார்கள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளதால் எதுவும் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.






