--- --:--:-- --

3 வயது சிறுவன் கண் முன்னே தாத்தா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை…கதறும் வீடியோ..!

7

ஜம்மு காஷ்மீரில் 3 வயது சிறுவன் கண் முன்னே அவனுடைய உறவினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். சோப்பூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி விட்டனர்.

 

இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎஃப் வீரரும், அங்கிருந்த கிராமவாசி ஒருவரும் பலியாகினர். கிராமவாசி உடன் வந்த 3 வயது சிறுவன் அவர் இறந்துவிட்டது தெரியாமல் சடலம் அருகே அமர்ந்திருந்தான். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது. அந்த சிறுவனை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க அழைத்து சென்றனர்.

 

பயங்கரவாதிகள் தாக்குதலில் மேலும் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon